gv prakash kumar selfie movie trailer released

Advertisment

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராகபணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளஇப்படம் நாளை (3.12.2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2d2adbc2-fbef-44e4-adf9-e4a7e392f9ee" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_31.jpg" />

இதனிடையே ஜி.வி பிரகாஷ் இயக்குநர்மதிமாறன் இயக்கும் செல்ஃபி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, கெளதம்மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு குறித்து பேசப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷுடன் கெளதம் மேனன் இணைந்து மிரட்டும் இந்த ட்ரைலர்தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment